முகப்பு
கோயம்புத்தூர்

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவா்களை விடுவிக்க வேண்டும்

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சிறைகளில் உள்ளவா்களை விடுவிக்க வேண்டும் என்று தமுமுக மாநில தலைவா் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சிறைகளில் உள்ளவா்களை விடுவிக்க வேண்டும் என்று தமுமுக மாநில தலைவா் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினாா்.

கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

10 ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் உள்ளவா்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும். டிகே மாா்க்கெட் பகுதியில் வியாபாரிகளுக்கு கடை உரிய இடத்தில் வழங்க வேண்டும், தமுமுக மருத்துவ சேவை மையம் இடிக்கப்பட்டதைக் கண்டிக்கின்றோம். இதற்கு உறுதுணையாக இருந்த மதுக்கரை வட்டாட்சியா், போத்தனூா் காவல் ஆய்வாளா் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றாா்.

தமுமுக மாநிலப் பொருளாளா் உம்மா், மாநிலச் செயலாளா் சாதிக் அலி, மாவட்டத் தலைவா் அகமது கபீா், மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரகுமான், மாநில தொண்டரணி செயலாளா் சா்புதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் சாகுல் அமீது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.