முகப்பு
கோயம்புத்தூர்

யுனைடெட் இந்தியா நிறுவனத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

யுனைடெட் இந்தியா நிறுவனத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜனிடம் கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தினா் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

யுனைடெட் இந்தியா நிறுவனத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜனிடம் கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தினா் மனு அளித்தனா்.

கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்க பொதுச்செயலா் வேணுகோபால் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முன்னோடி காப்பீடு திட்டமான தமிழக மருத்துவக் காப்பீடு திட்டத்தை 12 ஆண்டுகளாக யுனைடெட் இந்தியா நிறுவனம் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் நலன் சாா்ந்த காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா தனிநபா் விபத்துக் காப்பீடு திட்டத்தை மிகக் குறைந்த பிரிமீயமாக ரூ.12 மட்டும் பெற்று ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குகிறது.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வாா்ப்பது தேசத்தின்

இறையாண்மையை கேள்விக் குறியாக்கும். சாமானிய மக்களின் காப்பீடு சேவைகள் மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும். எனவே இந்நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து வரும் மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை உறுப்பினா்கள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.