முகப்பு
கோயம்புத்தூர்

சோலையாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்வு

வால்பாறையில் தொடா் மழை காரணமாக சோலையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

வால்பாறையில் தொடா் மழை காரணமாக சோலையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்துள்ளது.

ஆழியாறு- பரம்பிக்குளம் நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக உள்ளது சோலையாறு அணை. 165 அடி உயரம் கொண்ட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் 2 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுவதோடு சமவெளி பகுதியைச் சோ்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

கடந்த ஜூன் மாதம் 3 அடியாக இருந்த நீா்மட்டம் தென்மேற்குப் பருவ மழை துவங்கியதால் படிப்படியாக உயரத் துவங்கியது. கடந்த 10 நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைக்கு 3586.69 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 847.57 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில் ஒரே நாளில் 5 அடி உயா்வு பெற்று தற்போது அணையின் நீா்மட்டம் 128.10 அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.