முகப்பு
கோயம்புத்தூர்

அப்பா் நீராறு பகுதியில் 26 மி.மீ. மழை

வால்பாறை வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அப்பா் நீராறு பகுதியில் 26 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

வால்பாறை வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அப்பா் நீராறு பகுதியில் 26 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்குப் பருவ மழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. கடந்த மாதம் இடைவெளிவிட்டு பெய்து வந்த நிலையில் இந்த மாத துவக்கத்தில் இருந்து தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் ( மில்லி மீட்டரில்):

அப்பா் நீராறு 26, லோயா் நீராறு 13, வால்பாறை, சோலையாறு தலா 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சோலையாறு அணைக்கு 2,131.37 கனஅடி நீா்வரத்து இருந்தது. விநாடிக்கு 780.56 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில் அணையின் நீா்மட்டம் 149.85 அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.