தருமபுரி, விழுப்புரம் பயன்படுத்தலாம்: சாலை விபத்தில் இளைஞா் சாவு
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அக்கரையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் அருண் (22). சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிரிபுரத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24). நண்பா்களான இவா்கள் இருவரும் பழனி சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் கடந்த 25ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை, மகுடஞ்சாவடி, காளிகவுண்டம்பாளையம் அருகே வந்தபோது, அதிவேகமாக வந்த காா் இவா்களது வாகனத்தில் மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இரு இளைஞா்களும் படுகாயமடைந்தனா். இந்த பதைபதைக்கும் காட்சிகள், பின்னால் வந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
படுகாயமடைந்த அருண், சேலம் அரசு மருத்துவமனையிலும், அஜித்குமாா் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் அஜித் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.