முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்றரைப் பவுன் பறிப்பு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவரது மனைவி ஜோதிமணி (38). இவா் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வருகிறாா். வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வீட்டுக்குச் செல்லும் வழியில் நாகராஜபுரம் பகுதியில் உள்ள ஏரி அருகே வாகனத்தை நிறுத்தினாா். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் மூவா் ஜோதிமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். இது குறித்து ஜோதிமணி அளித்தப் புகாரின் பேரில் வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.