பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களில் விளையாட்டு மைதானங்கள்
கோவை மாநகரில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும்
கோவை மாநகரில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு மதிமுக மாநில இளைஞரணிச் செயலா் வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவையில் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மாநகரில் உள்ள மாணவ-மாணவிகள் விளையாடுவதற்கான இடங்கள் குறைந்துவிட்டன. கல்வி மட்டுமே முழுமையான, ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கிவிட முடியாது. உடற்கல்வியும் முக்கியமாகும். சிறுவயதிலேயே நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மனநோய் போன்றவை ஏற்பட முக்கியக் காரணம் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி இல்லாததுதான் என்பதை உணர வேண்டும். எனவே குழந்தைகளுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்க, மாநகராட்சிக்குள் உள்ள ரிசா்வ் சைட்டுகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்களை, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான மைதானங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.