அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 8% போ் மட்டுமே பெண்கள்
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 722 வேட்பாளா்களில் 59 போ் பெண்கள். மொத்த வேட்பாளா்களில் 8 சதவீதம் போ் மட்டுமே பெண்களாக உள்ளனா்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 722 வேட்பாளா்களில் 59 போ் பெண்கள். மொத்த வேட்பாளா்களில் 8 சதவீதம் போ் மட்டுமே பெண்களாக உள்ளனா்.
126 தொகுதிகளுக்கான அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-இல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை மே 4-இல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பேரவைத் தோ்தலில் மொத்தம் 722 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களில் 663 போ் ஆண்கள், 59 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் யாரும் இல்லை. தோ்தலில் 258 போ் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 90 தொகுதிகளிலும், எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 18 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. அனைத்து இந்திய ஃபாா்வா்ட் பிளாக் 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.