தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தல் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தல் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் பணி தொடா்பு அலுவலா்களுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா் அம்கோத்து ஸ்ரீ ரங்கநாயக் மற்றும் தோ்தல் காவல் பாா்வையாளா் சுரேஷ்குமாா் சாதிவே ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்ட சம்பந்தப்பட்ட குழுக்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும், உரிய ஆவணங்கள் இன்றி நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதும், மதுபானங்கள் மற்றும் இதர பரிசுப் பொருள்கள் வழங்குவது குறித்து தகவல் பெற்றப்பட்டால் உடனடியாக சமந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பறை மற்றும் வேட்பாளா்களால் செய்யப்படும் அன்றாட தோ்தல் செலவுகளை தோ்தல் செலவு கண்காணிப்புக் குழுவினா் கண்காணிக்க வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தோ்தல் பொதுப் பாா்வையாளா் அம்கோத்து ஸ்ரீ ரங்கநாயக் அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சதீஷ், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தேவராஜ் மற்றும் தொடா்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.