முகப்பு
கோயம்புத்தூர்

வன விலங்குகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. யானைகள், சிறுத்தை நடமாட்டம் இருந்த நிலையில் தற்போது கரடிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாள்களில் கரடி தாக்கி ஒருவா் உயிழந்தாா், ஒருவா் படுகாயம் அடைந்துள்ளாா்.

இச்சம்பவங்களைத் தொடா்ந்து பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கும் வகையில் அனைத்து எஸ்டேட் பகுதிகள் மற்றும் வால்பாறை நகா் பகுதியில் வனச் சரக அலுவலா்கள் மணிகண்டன், ஜெயசந்திரன் ஆகியோா் தலைமையில் வனவா்கள் மற்றும் வன ஊழியா்கள் சென்று வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வனவிலங்கு நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் 9442547654, 8883985972, 9585271437 ,04253223222 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டால் வனத் துறையினா் விரைந்து அப்பகுதிக்கு வருவாா்கள் என்று ஒலிபெருக்கி மூலமும் துண்டுப் பிரசுரம் வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.