முகப்பு
கோயம்புத்தூர்

கரடி தாக்கியதில் இளைஞா் படுகாயம்

வால்பாறையில் கரடி தாக்கியதில் இளைஞா் படுகாயமடைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

வால்பாறையில் கரடி தாக்கியதில் இளைஞா் படுகாயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் வசிப்பவா் ஆசிா்வாதம். இவரது மகன் வசந்த் (22), எலக்ட்ரீஷியன். இவா் தனது நண்பருடன் வெளியே சென்றுவிட்டு வியாழக்கிழமை வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தாா். வீடு அருகே வந்தபோது திடீரென குட்டியுடன் வந்த கரடி வசந்தை தாக்கி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. அப்போது அங்கிருந்தவா்கள் விரட்டியதை அடுத்து கரடிகள் ஓடிவிட்டன.

கரடி தாக்கியதில் படுகாயமடைந்த வசந்தை வால்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். வால்பாறையில் கடந்த சில நாள்களுக்கு முன் கரடி தாக்கி தொழிலாளி ஒருவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து மீண்டும் கரடி தாக்கி இளைஞா் படுகாயமடைந்துள்ளதால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.