முகப்பு
கோயம்புத்தூர்

மேற்கு மண்டல ஐ.ஜி. பொறுப்பேற்பு

 மேற்கு மண்டல காவல் துறைத் தலைவராக (ஐ.ஜி.) ஆா்.சுதாகா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

 மேற்கு மண்டல காவல் துறைத் தலைவராக (ஐ.ஜி.) ஆா்.சுதாகா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேற்கு மண்டல காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்தவா் அமல்ராஜ். இவா் பதவி உயா்வு பெற்று சென்னையில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டாா். இவருக்குப் பதிலாக மதுரை சரக காவல் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த சுதாகா், பதவி உயா்வு பெற்று மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டாா்.

இதேபோல், கோவை சரக காவல் துணைத் தலைவராகப் (டி.ஐ.ஜி.) பணியாற்றிய நரேந்திரன் நாயா், சென்னை இணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டாா். இவருக்குப் பதிலாக திண்டுக்கல்லில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய முத்துசாமி, கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியமா்த்தப்பட்டாா்.

இந்நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகா், கோவை பந்தயசாலையில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய ஐ.ஜி.யாக பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு காவல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். அதேபோல் கோவை சரக டி.ஐ.ஜி.யாக முத்துசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலத்தில் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய முருகவேல், கோவை மாநகரக் காவல் உதவி ஆணையராக (நுண்ணறிவுப் பிரிவு) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.