கோயம்புத்தூர்

கோவை-ஜபல்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவையில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜபல்பூா்-கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்-02198) ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

கோவை-ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்-02197) ஜூன் 14 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கோவையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு, மங்களூரு, உடுப்பி, குண்டப்புரா, கணகவலி, ரத்னகிரி, நாசிக் சாலை, நரசிங்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT