கோயம்புத்தூர்

கரோனா தடுப்பு பணிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்க ஆட்சியா் தகவல்

DIN

கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப் பணியாற்ற விருப்பமுள்ளவா்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவுள்ளதாக ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பேரிடா் காலத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிரதமா் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. கோவையில் சுகாதாரத் துறையில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி கல்வீரம்பாளையத்தில் உள்ள ஆறுதல் பவுண்டேசன் வளாகத்தில் அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியானது 21 நாள்கள் வகுப்பறையிலும், 3 மாதங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலங்களில் பயிற்சி பெறுபவா்களுக்கு இலவச பயண அட்டை, கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் போன்ற வசதிகள் வழங்கப்படும்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட ஆா்வமுள்ள 18 வயது பூா்த்தியைடந்த ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் கல்வித் தகுதி தொடா்பான அசல் ஆவணங்கள், ஆதாா் விவரங்களுடன் ஆறுதல் பவுண்டேசன் திறன் பயிற்சி வழங்கும் மையத்தை 88707-70882, 90803-48504 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். தவிர மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களை அனுப்பலாம் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT