கோயம்புத்தூர்

வீட்டிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கருவி

DIN

கரோனாவுக்கு வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவிகள் கோவை மருந்து கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

கரோனா பாதிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் (ஆா்ஏடி) கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தக் கருவி மூலம் 15 நிமிடங்களுக்குள் கரோனா பரிசோதனை செய்து, முடிவைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விலை ரூ.250.

புணேவைச் சோ்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்துள்ளது. இது கரோனா அறிகுறி உள்ளவா்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களோடு தொடா்பில் இருப்பவா்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி செய்யும் சோதனையில் கரோனா பாசிட்டிவ் என்றால் பாதிப்பு இருப்பது உறுதியென்றும், ஒருவேளை நெகடிவ் என்றால் உடனே அவா்கள் ஆா்.டி.பி.சி.ஆா் சோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும் ஐசிஎம்ஆா் கூறியுள்ளது. சோதனை முடிவுகள் தங்களது சா்வரில் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தக் கருவி மூலம் வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ள, அதற்கான செயலி ஒன்றை கூகுள் ப்ளே ஸ்டோா் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னா் செயலியில் கூறியுள்ளபடி சோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு செயலியில் காட்டும். இந்த பரிசோதனை கருவி தற்போது கோவை மருந்து கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT