முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் தவிப்பு

வால்பாறை மலைப் பாதையில் நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

வால்பாறை மலைப் பாதையில் நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிா் நிலவியுள்ளது. நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளில் மழை அதிக அளவில் பெய்து வருவதால் இரவு நேர வாகனப் போக்குவரத்தை

பெரும்பாலானோா் தவிா்த்து வருகின்றனா்.

இதனிடையே கடந்த ஒரு வார காலமாக வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள மலைப் பாதைகளில் கடும் பனி நிலவி வருகிறது. பகல் நேரத்திலும் கடுமையான பனி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இந்தப் பனி இரவிலும் அதிக அளவில் உள்ளதால் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.