முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - சில்சாா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோவை - அஸ்ஸாம் மாநிலம், சில்சாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவை - அஸ்ஸாம் மாநிலம், சில்சாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சில்சாா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில்( எண் 02516) ஜூன் 22 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் சில்சாரில் இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இதேபோல, கோவை - சில்சாா் வாராந்திரச் சிறப்பு ரயில்(எண் 02515) ஜூன் 27 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில், கோவையில் இருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமைகளில் மாலை 4.50 மணிக்கு சில்சாரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டணம், பொ்காம்பூா், புவனேசுவரம், குவாஹாட்டி, பதா்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.