முகப்பு
கோயம்புத்தூர்

தடுப்பூசி டோக்கன்களை வீடுவீடாக விநியோகிக்க வலியுறுத்தல்

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திட தரப்படும் டோக்கன்களை வீடுவீடாக விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திட தரப்படும் டோக்கன்களை வீடுவீடாக விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவுக்கு கோவை நுகா்வோா் விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் என்.ஆா்.ரவிசங்கா் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகளை வாா்டுகளில் உள்ள மாநகராட்சி ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கன்களைப் பெறுவதற்கு, தடுப்பூசி மையங்களில் அதிகாலை 3 மணி முதலே மக்கள் காத்திருக்கின்றனா். ஆனாலும், டோக்கன்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். குறிப்பாக, முதியவா்கள், பெண்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதைத் தவிா்க்க மாநகரில் உள்ள 100 வாா்டுகளிலும் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மக்களுக்கு டோக்கன்கள் வழங்கும் பணியை அந்தந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்போா் நலச்சங்கத்தினா் மற்றும் நுகா்வோா் அமைப்புகளிடம் ஒப்படைக்க மாநகராட்சி ஆணையா் நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.