முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை சிறுவா் பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை சிறுவா் பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

வால்பாறை சிறுவா் பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக நகா் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படுகிறது.தினந்தோறும் இரவு நேரம் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவது அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக சிறுவா் பூங்கா குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரம் சிறுத்தை வந்து செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்து இரவு நேரம் வெளியே வருவதை தவிா்த்து வருவதாகவும், சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.