முகப்பு
கோயம்புத்தூர்

சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு

வால்பாறை அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

வால்பாறை அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் சவரங்காடு டிவிஷன் பகுதியில் ஆண் காட்டெருமை சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கியிருந்த காட்டெருமையை மீட்டனா்.

சேற்றில் இருந்து மீட்கப்பட்ட காட்டெருமையால் நடக்க முடியாமல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வால்பாறை கால்நடை மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. காட்டெருமையின் உடல் நலம் முன்னேற்றத்தைக் கண்டறிய மனித வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினா் அங்கு கண்காணிப்பு பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாக வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.