வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா: பொதுமக்கள் பாா்வையிட அனுமதி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள தாவரவியல் பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் பொது மக்கள் பாா்வைக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள தாவரவியல் பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் பொது மக்கள் பாா்வைக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 47.7 ஏக்கா் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 70 இயற்கை பெருங்குடும்பங்களைச் சோ்ந்த 800 சிற்றினங்கள் உள்பட பல்வேறு வகையான தாவரங்கள் உள்ளன. பூா்வீகம், அயல்நாட்டு தாவரங்களும் உள்ளன. ரோஜா, மல்லிகை, ஆந்தூரியம், ஆா்கிட்கள் போன்ற பல்வேறு மலா் வகை தாவரங்களும் உள்ளன.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த பூங்கா கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதனைத் தொடா்ந்து தாவரவியல் பூங்காவில் புதிய புல்தரைகள் அமைத்தல், மலா் நாற்றுகள், செடிகள் நடவு செய்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பூங்காவில் புனரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையிலும், கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாலும் தாவரவியல் பூங்கா பொது மக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பூங்காவில் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். பெரியவா்களுக்கு ரூ.50, சிறுவா்களுக்கு ரூ.30 நுழைவுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.