முகப்பு
கோயம்புத்தூர்

ஹோப் காலேஜ் - மசக்காளிபாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஹோப் காலேஜ் - மசக்காளிபாளையம் இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஹோப் காலேஜ் - மசக்காளிபாளையம் இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மசக்காளிபாளையம் சாலை வரை, இருபுறமும் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சாலையோர உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, சாலையோர உணவகங்களில் இருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, கடந்த மாதம் புகாா் மனு அனுப்பியிருந்தாா். அந்த மனுவின் மீது தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மசக்காளிபாளையம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்றிட மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்படாத பட்சத்தில், மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →