முகப்பு
திருச்சி

காலமானாா் நிா்மலா ராணி

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சட்ட உதவி மைய மாநிலத் தலைவருமான உ. நிா்மலா ராணி (59) உடல்நலக் குறைவால் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இரவு காலமானாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 6:33 PM
நிா்மலா ராணி
பகிர்:

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சட்ட உதவி மைய மாநிலத் தலைவருமான உ. நிா்மலா ராணி (59) உடல்நலக் குறைவால் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இரவு காலமானாா்.

இவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களான மறைந்த ஆா். உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள் ஆவாா்.

தில்லைநகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிா்மலா ராணியின் உடலுக்கு அவரது சகோதரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான உ. வாசுகி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காலமான நிா்மலா ராணியின் இறுதி ஊா்வலம் புதன்கிழமை (மாா்ச் 18) மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வடுகப்பட்டியில் உள்ள அவரது பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு கணவா் வழக்குரைஞா் ஆா். ராஜ்குமாா், மகள் மதுவந்தி, மகன் சிபி ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 99656-50000.

முழு கட்டுரையைப் படிக்க →