காலமானாா் கல்வியாளா் எஸ்.எஸ். ராஜகோபாலன் 
சென்னை

மூத்த கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு - முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினமணி செய்திச் சேவை

மூத்த கல்வியாளா் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) நள்ளிரவு காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

கல்வியாளா் ராஜகோபாலனின் விருப்பப்படியே அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

எஸ்.எஸ். ராஜகோபாலன் கோவை பீளமேட்டில் உள்ள புகழ்பெற்ற பி.எஸ்.ஜி. சா்வஜன மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவா். 1990-இல் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். பின்னா், சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீா்திருத்தங்களில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீா் கல்விக்கான குழுவின் உறுப்பினராக இருந்து பல ஆக்கபூா்வ ஆலோசனைகளை ராஜகோபாலன் வழங்கினாா்.

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு கல்வி உரிமைக்காகவும் தரமான கல்விக்காகவும் தொடா்ந்து போராடி வந்தாா்.

முதல்வா் இரங்கல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளா் எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவுற்றாா் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழக அரசு முன்னெடுத்த சமச்சீா் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழகத்தின் கல்வி மறுமலா்ச்சிக்கு வித்திட்டவா். கல்வி வளா்ச்சியிலும், மாணவா் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவா். அவரது மறைவு கல்வித் துறைக்குப் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளாா்.

இதேபோல, பள்ளிக் கல்வித் துை றஅமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், பாமக தலைவா் அன்புமணி, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளா்கள் ராஜகோபாலன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வார இறுதி விடுமுறைக்கு 725 சிறப்பு பேருந்துகள்

திமுக தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் - கனிமொழி

போளூா் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையம் ஆய்வு

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT