நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
”சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
Advertisement
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.