திமுக கூட்டணியில் விசில் சப்தம் பலமாகக் கேட்கிறது: விஜய்
நெல்லை பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு.
திமுக கூட்டணியில் விசில் சப்தம் பலமாகக் கேட்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கே.டி.சி. நகரில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் தவெக தலைவர் விஜய் பாளையங்கோட்டைமற்றும் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.
அப்போது தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
Advertisement
Advertisement
மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், தவறு நடக்க விடமாட்டேன். திமுக ஆட்சியில் ஊழல் ஊறிப் போயிருக்கிறது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்கிறீர்கள்.
எத்தனை முனை என்று உருட்டினாலும் இரு முனைப் போட்டி மட்டுமே. ஒன்று தவெக, மற்றொன்று திமுக. எத்தனை சோதனைகள், வேதனைகள் கொடுத்தாலும் சரி.. திமுக, பாஜக, வேறு யாரானாலும் சரி, மக்களிடம் இருந்து என்னைப் பிரிக்க முடியாது.
யார்யாருக்கோ ஓட்டு போட்டீர்கள், இம்முறை நம் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வாக்களியுங்கள். செய்ய முடியாததை சொல்ல மாட்டேன், சொல்லாததையும் செய்வோம்.
திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்மீது காண்டு, அந்த காண்டிற்கு காரணம் என்ன தெரியுமா? அவர்கள் வீட்டிலேயே விசில் சப்தம் பலமாகக் கேட்கிறதாம்.
கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள் செல்லவில்லை, ஒவ்வொரு வீட்டுக்குள் சென்ற பின்னர்தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேன்.
மற்றவர்களுக்குத்தான் இது எலக்ஷன், விஜய்க்கும், விஜய்யோடு நிற்பவர்களுக்கும் இது இமோஷன். எனக்கு ஒண்ணுன்னா மக்களுக்கும், மக்களுக்கு ஒண்ணுன்னா எனக்கும் கண்கள் கலங்கும். வெற்றி நிச்சயம்” என்றார்.
TVK leader Vijay has stated that the sound of whistles is being heard loudly within the DMK alliance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.