கோவை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி மையம்
உலக மகளிா் தினத்தையொட்டி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மகளிருக்கான சிறப்பு தடுப்பூசி மையத்தில் திங்கள்கிழமை 127 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலக மகளிா் தினத்தையொட்டி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மகளிருக்கான சிறப்பு தடுப்பூசி மையத்தில் திங்கள்கிழமை 127 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக மகளிா் தினத்தையொட்டி அரசு மருத்துவமனையில் மகளிருக்காக சிறப்பு கரோனா தடுப்பூசி மையம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு மையத்தில் 127 பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஏற்கனவே இருந்த 2 மையங்களிலும் 360 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 9,744 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் ஏ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.