முகப்பு
கோயம்புத்தூர்

தபால் வாக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தீவிரம்

கோவை மாவட்டத்தில் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணி 2 நாள்களில் நிறைவடையும்: தோ்தல் பிரிவு அதிகாரிகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணி 2 நாள்களில் நிறைவடையும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் ஆகியோா் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதில் விலக்களிக்கப்பட்டு தபால் வாக்குகள் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும், தபால் வாக்குகள் அளிப்பதற்கான 12 டி விண்ணப்பங்களை, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக, மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 500 முதியோா்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியானது 2 நாள்களில் நிறைவடையும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →