முகப்பு
கோயம்புத்தூர்

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைப் பறித்த இருவா் கைது

 கோவையில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைப் பறித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

 கோவையில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைப் பறித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு காந்திமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (74). தனியாக வசித்து வருகிறாா். இவரிடம் சேலம், முள்ளுபாடி பகுதியைச் சோ்ந்த ஜாஹீனா பானு (36) வீட்டு வேலை செய்து வந்தாா். இவா், தனது நண்பரான சேலம், சின்ன திருப்பதி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (26) என்பவரை ராஜலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து வந்தாா். அப்போது இருவரும் சோ்ந்து ராஜலட்சுமியை மிரட்டி பணம் பறிக்க முயன்றனா்.

ராஜலட்சுமி பணம் தராத நிலையில் அவரின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 2 பவுன் நகையை பறித்தனா். இது தொடா்பாக ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸாா் 2 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →