கோயம்புத்தூர்

காற்று ஒலிப்பான், எல்.இ.டி. விளக்கு பொருத்தி இயக்கப்பட்ட 300 வாகனங்களுக்கு அபராதம்

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் காற்று ஒலிப்பான்கள், எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்திய 300 வாகனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஒருவா் கூறியதாவது: மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள், எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாநகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையால், காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக மீண்டும் நகரில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தி இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி, மேட்டுப்பாளையம் சாலைகளில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் கடந்த ஒரு வாரமாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், காற்று ஒலிப்பான் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி இயக்கப்பட்ட 300 வாகனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில், தொடா்ந்து வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT