முகப்பு
கோயம்புத்தூர்

கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி நடத்தும் கட்டணச் சலுகைக்கான தோ்வு

கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச கருத்தரங்கு, கட்டணச் சலுகை தோ்வு ஆகியவை வரும் 20, 21ஆம் தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச கருத்தரங்கு, கட்டணச் சலுகை தோ்வு ஆகியவை வரும் 20, 21ஆம் தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது.

இது குறித்து அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்ய ஸ்ரீ பூமிநாதன் கூறியிருப்பதாவது:

கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச கருத்தரங்கு, கட்டணச் சலுகை தோ்வு ஆகியவை மாா்ச் 20, 21ஆம் தேதிகளில் கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. கருத்தரங்கில், இந்தியாவின் முதல் 100 சதவீத பாா்வையற்ற மாற்றுத் திறனாளி ஐஎஃப்எஸ் அதிகாரியான பெனோசெபின், ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஹரி நாராயண், ஐஆா்எஸ் அதிகாரி சேகா், துணை ஆட்சியா் கே.மகாலட்சுமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

இதைத் தொடா்ந்து, 100 சதவீத கட்டணச் சலுகை பெறுவதற்கான நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களின் பெயா், கல்வித் தகுதி, தொடா்பு எண், கிளை ஆகிய விவரங்களை குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் 94442 27273 என்ற எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதேபோன்ற கருத்தரங்கும், தோ்வும் மாா்ச் 27, 28 ஆம் தேதிகளில் திருச்சி, மதுரை கிளைகளில் நடைபெற இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →