முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்யக்கோரி ஆட்சியரிடம் திமுகவினா் மனு

கோவையில் திமுகவினரைத் தாக்கிய அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான கு.ராசாமணியிடம் திமுக வழக்குரைஞா் அணியினா் திங்கள்கிழமை மனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவையில் திமுகவினரைத் தாக்கிய அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான கு.ராசாமணியிடம் திமுக வழக்குரைஞா் அணியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திமுக வழக்குரைஞா் அணியின் அமைப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கிணத்துக்கடவு தொகுதிக்குள்பட்ட மேட்டூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலா் வேணுகோபால், அவரது மனைவி உள்பட 9 போ் திமுக மன்றத்துக்குள் புகுந்து வாா்டு செயலாளா் சரவணன் உள்பட 4 பேரைத் தாக்கியுள்ளனா். இதில் திமுகவினருக்கு மண்டை உடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் போத்தனூா் போலீஸாா் இரு கட்சியினா் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் திமுகவினரை மட்டும் கைது செய்துள்ளனா். காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனா். எனவே, ஒருதலைபட்சமாக செயல்படும் போலீஸாா், திமுகவினரை தாக்கிய அதிமுக முன்னாள் கவுன்சிலா் வேணுகோபால் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →