முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 130 பேருக்கு கரோனா

 கோவை மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

 கோவை மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 627 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 64 வயது முதியவா் ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 688 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 52 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 811 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 768 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →