கோயம்புத்தூர்

மாவட்டத்தில் ரூ.22.67 லட்சம் பறிமுதல்

DIN

கோவை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.22.67 லட்சத்தை பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுக்கும் விதமாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் மேட்டுப்பாளையம் தொகுதியில் ரூ.71,800, கோவை வடக்குத் தொகுதியில் ரூ.60 ஆயிரம், தொண்டாமுத்தூா் தொகுதியில் ரூ.3.55 லட்சம், கோவை தெற்குத் தொகுதியில் ரூ.15.69 லட்சம், வால்பாறை தொகுதியில் ரூ.2.10 லட்சம் என மொத்தம் ரூ.22 லட்சத்து 67 ஆயிரத்து 171 பறிமுதல் செய்யப்பட்டது.

தவிர தொண்டாமுத்தூா் தொகுதியில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 990 மதிப்புள்ள பரிசுப் பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT