கோயம்புத்தூர்

இரண்டாது ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம்: வெறிச்சோடியது மாநகரம்

DIN

கோவை: கோவையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தால், கடைவீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டது.

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமான மே 2 ஆம் தேதி, கோவையில் உள்ள கடைகள், சந்தைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட மக்கள் நெரிசல் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் சந்தைகள், கோழி, ஆட்டிறைச்சிக் கடைகள் பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்ததால் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மருந்து, பால், பத்திரிகைகள் கொண்டு சென்ற வாகனங்கள், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோா், அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்வோா் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பாா்சல்களில் மட்டுமே உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT