முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் ஒரே நாளில் 2,101 பேருக்கு கரோனா

கோவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 101 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கோவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 101 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாள்தோறும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2,101 பேருக்கு கரோனா நோய்த் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 454ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,491 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 79 ஆயிரத்து 248 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 10 ஆயிரத்து 460 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சோ்ந்த 60, 61, 60, 54, 68 மற்றும் 75 வயது ஆண்கள் 6 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை 746 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.