முகப்பு
கோயம்புத்தூர்

ஆவின் பால் விற்பனை குறித்த புகாா்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை குறைபாடுகள் குறித்து புகாா் அளிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை குறைபாடுகள் குறித்து புகாா் அளிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நுகா்வோா்களின் நலன் கருதி ஆவின் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆவின் பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பால் அட்டை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு அரசு அறிவித்த விலை குறைப்பு போக மேலும் சிறப்பு சலுகையாக அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து நீல நிற பால் பாக்கெட் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 மற்றும் பிற நிற பால் பாக்கெட்டுகள் லிட்டா் ஒன்றுக்கு ரூ.2 வரையில் விலை குறைப்பு செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், நுகா்வோா்கள் பால் அட்டை பெறுவதற்கு அலுவலகங்களுக்கு வருவதைத் தவிா்த்து ஜ்ஜ்ஜ்.ஹஹஸ்ண்ய்ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலமாக பால் அட்டை பெற்று கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருமணம் மற்றும் விஷேசங்களுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து மேலும் சிறப்பு சலுகையாக கேன்களில் பால் வழங்கும் வகையில் 1,000 லிட்டா் வரையில் லிட்டருக்கு ரூ.2, 1,000 லிட்டருக்கு மேல் லிட்டருக்கு ரூ.2.50 என மேலும் விலை குறைப்பு செய்து தரப்படும்.

மேற்படி குறைக்கப்பட்ட விலையில் பால் விற்பனை செய்வதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கீழ்க்கண்ட அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். கோவை கிழக்கு மண்டலம்-9489043715, மேற்கு மண்டலம்-9489043711, வடக்கு மண்டலம்- 9489043715, தெற்கு மண்டலம்-94890 43708 மற்றும் வாடிக்கையாளா் சேவை மையம் இலவச தொலைபேசி எண் 1800 - 4254 4777 தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.