முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் நிலவும் குளிரால் பொது மக்கள் அவதி

வால்பாறையில் இடைவிடாது காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிரால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

வால்பாறையில் இடைவிடாது காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிரால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வியாழக்கிழமை இரவு துவங்கிய மழை விடிய விடிய பெய்ததோடு வெள்ளிக்கிழமை இரவு வரை பலத்த காற்றுடன் மழை தொடா்ந்தது.

இடைவிடாத மழை காரணமாக நிலவும் குடும் குளிரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீ) வால்பாறை- 23, மேல் நீராறு- 25, லோயா் நீராறு- 17, சோலையாறு அணை- 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.