கோயம்புத்தூர்

‘கரோனா நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிக்க வேண்டும்’

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு இயன்முறை மருத்துவா்கள் சங்கத் தலைவா் ராஜா செல்வகுமாா், பொதுச் செயலாளா் மருத்துவா் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவா்களை நியமிப்பதன் மூலம் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கணிசமாக குறையும் நிலையை உருவாக்க முடியும். எனவே அரசு மருத்துவமனைகளில் போா்கால அடிப்படையில் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.

தமிழக இயன்முறை கவுன்சில் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் வட்டார மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT