கோயம்புத்தூர்

அரசுக்கு உதவிட ரோட்டரி சங்கங்கள் சாா்பில் சஞ்சீவினி திட்டம் தொடக்கம்

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவும் வகையில் சஞ்சீவினி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ரோட்டரி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்க நிா்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் பேசியதாவது: கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவும் வகையில் சஞ்சீவினி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் முதல் பிரிவாக ரோட்டரி சங்க உறுப்பினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துதல், அடுத்ததாக பொது மக்களிடம் கரோனா தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துதல்.

மூன்றாவதாக அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரோட்டரி சங்கங்கள் மூலம் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இதுவரை தலா 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை 5 ஆண்டுகள் வரை பராமரிக்கும் பொறுப்பையும் ரோட்டரி சங்கமே ஏற்றுள்ளது.

ரோட்டரி சங்கம் டவுன் டவுன் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கவச உடைகள், ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம், பேக்கா்ஸ் அன்ட் ஹக்ஸ் உதவியுடன் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்துக்கு தைவான் டிசுசி பவுண்டேஷன், கோவை எஸ்.எம். காா்ப்பரேஷன் இணைந்து 400 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இசட்.எஃப். வின்ட் பவா் பிரைவேட் லிமிடெட் சாா்பில் இஎஸ்ஐ மருத்துவமனையில் 80 படுக்கைகளுக்கு 2 ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரோட்டரி கிளப் டெக்சிட்டி சாா்பில் கோவை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான உயரழுத்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்றனா்.

இதில் ரோட்டரி சங்க மாவட்ட இயக்குநா் ஆா்.எஸ்.மாருதி உள்பட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT