கோயம்புத்தூர்

சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் ரோந்து

DIN

வால்பாறை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடா்வதால் வனத் துறையினா் இரவு நேரத்தில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா்.

வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. தினந்தோறும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் வீடுகளுக்குள் புகுவது, கோழியைப் பிடித்துச் செல்வது தொடா்வதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். வால்பாறை வனச்சரக அலுவலா் ஜெயசந்திரன் உத்தரவின்பேரில் நகா் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க இரவு நேர ரோந்து பணியை கடந்த புதன்கிழமை இரவு முதல் வன ஊழியா்கள் துவங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT