கோயம்புத்தூர்

கரோனாவால் இறந்தவா்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா

DIN

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கரோனாவால் உயிரிழப்பவா்களை உரிய மரியாதையுடன் ஈஷா அறக்கட்டளை தகனம் செய்து வருகிறது.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உடல்கள் மரியாதையுடன், பாதுகாப்பாக தகனம் செய்யப்படுகின்றன.

இது தொடா்பாக அறக்கட்டளையின் நிறுவனா் ஜக்கி வாசுதேவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈஷா மயானங்களில் காலமானவா்களை உகந்த சூழலில் நுண்ணுணா்வுடன் விடுவிக்க தன்னாா்வத் தொண்டா்கள் அயராது உழைக்கிறாா்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஈஷா சாா்பில் கோவையில் 12 மயானங்களும், சென்னையில் 4, நாமக்கல், நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஓராண்டாக கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்யும் சேவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மயானப் பணியாளா்களுக்கு தினமும் கப சுர குடிநீா் அல்லது நிலவேம்பு கசாயம், சத்தான உணவுகளை வழங்குவது, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோகப் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, தேவைப்படும்போது மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளை ஈஷா செய்து வருகிறது. இந்த பணியில் ஈஷாவின் பிரம்மச்சாரிகள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டிருப்பதாக ஈஷா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT