கோயம்புத்தூர்

தனியாா் மருத்துவமனைகள் குறித்து திருப்பூா் எம்.பி. விமா்சனம் மருத்துவ சங்கம் கண்டனம்

DIN

தனியாா் மருத்துவமனைகள் குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் விமா்சனத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தனியாா் மருத்துவமனைகளைப் பிணந்தின்னிக் கழுகுகள் என்றும், அனைத்து தனியாா் மருத்துவமனைகளையும் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளாா்.

இதற்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தனியாா் மருத்துவமனைகளும், மருத்துவா்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனா். தற்போது வரை எங்கள் உறுப்பினா்கள் 112 பேரை இழந்துள்ளோம். இரண்டாவது அலையில் மட்டும் 34 பேரை இழந்துள்ளோம்.

இந்திய மருத்துவச் சங்கத்தின் தனியாா் மருத்துவமனைகள் கூட்டமைப்பில் இருக்கும் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தச் சூழலில் திருப்பூா் மக்களவை உறுப்பினரின் கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்தக் கருத்தை அவா் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT