முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் சிட்கோ தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: விளக்கு ஏந்தி விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Updated On : 4 நவம்பர் 2021, 7:06 pm IST
கோவை மாவட்டத்தில் சிட்கோ தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: விளக்கு ஏந்தி விவசாயிகள் போராட்டம்
பகிர்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சுமார் 3800 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

Advertisement

Advertisement

சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்காக அப்பகுதிகளில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் மக்கள் தீபாவளி பண்டிகையை புறக்கணித்ததுடன் தமிழக அரசு உடனடியாக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.