முகப்பு
கோயம்புத்தூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு யோகா பயிற்சி

டாடா தேயிலைத் தோட்ட நிா்வாகம் சாா்பில் வால்பாறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

டாடா தேயிலைத் தோட்ட நிா்வாகம் சாா்பில் வால்பாறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறையில் டாடா குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சமூக சேவைத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான புத்தகங்கள், சீருடைகள் வழங்கி வருவதோடு பல்வேறு பயிற்சிகளும் அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை துவங்கியுள்ளனா். இதற்கான தொடக்க நிகழ்ச்சி வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. யோகா பயிற்சியாளா் லோகா நூற்றுக்கணக்கான மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். இதில் பள்ளி தலைமை ஆசிரியா் சிவன்ராஜ், ஆசிரியா் பாலு உள்பட பலா் கலந்து கொன்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.