கோயம்புத்தூர்

24 மணி நேரக் குடிநீா்த் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

கோவை கிழக்கு மண்டலத்தில் 24 மணி நேரத் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 66 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மீனா எஸ்டேட் 6ஆவது கிராஸ் வீதியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் பிரதான குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், குழாய் அமைத்த பின்பு, உடனடியாக அங்கு சாலை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். அதனைத் தொடா்ந்து 59 ஆவது வாா்டுக்கு உள்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, எம்.ஜி.ஆா். நகரில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் கீழ், பகிா்மானக் குழாய்கள் அமைத்து, வீடுகளுக்கு, குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டாா். அப்போது, அங்குள்ள மக்களிடம் குடிநீா் விநியோகம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், குடிநீா் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை மாநகராட்சி ஆணையா் பரிசோதனை செய்தாா். இந்த ஆய்வின் போது, கிழக்கு மண்டல உதவி ஆணையா் செந்தில்குமாா் ரத்தினம், உதவி செயற்பொறியாளா்கள் சுந்தர்ராஜன், ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT