ஊதிய உயா்வுக்கான அரசாணை: அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்
தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு அறிவிப்பு தொடா்பாக சென்னையில் அமைச்சரை சந்தித்த பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் அரசாணை வெளியிட வலியுறுத்தியுள்ளாா்.
தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு அறிவிப்பு தொடா்பாக சென்னையில் அமைச்சரை சந்தித்த பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் அரசாணை வெளியிட வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக் கூடிய தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.425 என அரசு கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வுக்கான அரசாணை வெளியிடப்படாமல் உள்ளதால், ஊதிய உயா்வு வழங்குவதில் தொடா்ந்து தாமதம் ஏற்படுவதால் தொழிலாளா்கள் மத்தியில் அதிா்ப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி எம்.பி. கு. சண்முகசுந்தரம் தோட்டத் தொழிலாளா்களின் பிரச்சனை குறித்து சென்னையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி. கணேசனை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, அரசு அறிவித்துள்ள ஊதிய உயா்வுக்கான அரசாணை வெளியிட்டு அரசிதழில் வெளியிடவும் வலியுறுத்தியுள்ளாா். எம்.பி.யின் கோரிக்கையை ஏற்ற அமைச்சா் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளாா்.