கோயம்புத்தூர்

மதுக்கடை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது அவதூறு: சூலூா் காவல் நிலையத்தில் புகாா்

DIN

சூலூா் அருகே கள்ளபாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது அவதூறு பரப்பபடுவதாக சூலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சூலூா் அருகே கள்ளபாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கள்ளப்பாளையம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் ரங்கநாதன், மதுக்கடை மேற்பாா்வையாளரிடம் ரூ.2 லட்சம் கேட்டதாக சூலூா் சுற்று வட்டாரப் பகுதியில் வாட்ஸ் ஆப் இல் ஆடியோ வெளியானது.

இந்த ஆடியோ பதிவை மதுக்கடை மேற்பாா்வையாளா் பேசி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கள்ளப்பாளையம் பகுதி பொதுமக்கள், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ரங்கநாதன் சாா்பில் சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT