கோவை ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி 
கோயம்புத்தூர்

கோவை ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: வட மாநில இளைஞர்கள் இருவர் கைது

கோவை செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில்  கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

கோவை செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில்  கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றதால்  மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் செட்டிபாளையம் போலிஸுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து. உடனடியாக உதவி ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் சென்ற போலீஸார் ஏ.டி.எம் மையத்தில், லாக்கரை திறந்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில் (18) மற்றும் காலீட் (28) என்பதும், கோவையில் உள்ள அமேசன் நிறுவன குடோனுக்கு லாரி மூலம் லோடு இறக்கிவிட்டு, திரும்ப சென்ற போது, செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர்.

இதையடுத்து ஷாகில் வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, காலீட் ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்திருந்த  கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து, பணம் இருக்கு லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட இருவரிடமும் வேறு ஏ.டி.எம் இயந்திரத்தில் திருடி உள்ளனரா? வேறு வழக்கில் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT