நீரா பானத்தை நீண்ட காலம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்துக்கு ஒப்பந்தம்
நீராவை நீண்ட காலம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை வணிக மயமாக்குவதற்காக, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம்
நீராவை நீண்ட காலம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை வணிக மயமாக்குவதற்காக, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுவாணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் இடையே வெள்ளிக்கிழமை (அக்டோபா் 1) புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நீரா என்பது தென்னையின் முதிா்ச்சியற்ற பூவிலிருந்து பெறப்பட்ட ஒரு சுவையான, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறச் சாறாகும். குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ 35), தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இது ஒரு சுவையான ஆரோக்கிய பானம்.
நீரா ஒரு சுவையான பானம் என்றாலும், சாறு பிரித்தெடுத்த சில மணி நேரங்களுக்குள் சுற்றுப்புற வெப்பநிலையில் இயற்கையான நொதித்தலுக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது.
எனவே, ஆல்கஹால், அமில காரத்தன்மையற்ற புளிக்காத வகையில் நீரா பானத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பம் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மையத்தால் உருவாக்கப்பட்டது.
நீராவை நீண்ட காலம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை வணிக மயமாக்குவதற்காக, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுவாணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
துணைவேந்தா் நீ.குமாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் ஏ.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சிறுவாணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் டி.ஆா்.மருதாச்சலமூா்த்தி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இதில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினா் பலா் பங்கேற்றனா்.